Skip to main content

100% காதல் படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 100% லவ். 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற 100% லவ் படம் தமிழில் 100% காதல் என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

 

vbk



​​​​​​இதன் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷும் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளார்கள். இயக்குநர் சுகுமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எம்.எம். சந்திரமௌலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்