rain on films

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், கெளதம் மேனன், சசி, வசந்த பாலன் உள்ளிட்ட பத்து இயக்குநர்கள் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் தயாரிக்கப்படவுள்ளன. இவர்களில் பெரும்பாலான இயக்குநர்கள் தனித்தனியே தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிலையில், புதிய முன்னெடுப்பிற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இந்நிறுவனத்தின் தயாரிப்பு அலுவலகம், இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகத்தில் வைத்து செயல்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.