Skip to main content

 ‘காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே...’ - திருமணத்தை அறிவித்த விஷால்(படங்கள்)

Published on 20/05/2025 | Edited on 04/06/2025

 

சாய் தன்ஷிகா லீட் ரோலில் நடித்த ‘யோகி டா’ பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஷால் சாய் தன்ஷிகாவைத் தான் காதலிக்கிறேன் என்றும் அவரைத் தான் கல்யாணம் செய்யப்போகிறேன் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். மேலும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்து மேடையை வருங்கால மனைவியுடன் பகிர்ந்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் முன்னதாக சங்கத்தின் புதிய கட்டடம் கட்டி முடித்த பிறகு தன்னுடைய கல்யாணம் நடக்கும் என கூறியிருந்தார். இப்போது சங்க கட்டடம் ஜூலையில் முடிக்க திட்டமிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்