Advertisment

தெலுங்கிலும் வில்லனாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார். தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி ரஜினி படத்தில் தனக்கென ஒரு தனி மாஸை வில்லனாக நடித்து நிரூபித்திருப்பார்.

Advertisment

hm

இந்நிலையில் கைதி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து ‘தளபதி 64’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மேலும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் சுகுமாறன் ரங்கஸ்தளம் படத்தை தொடர்ந்து அல்லூ அர்ஜூனை வைத்து படம் எடுக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் அல்லூ அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். இந்நிலையில் அல்லூ அர்ஜூனுக்கு வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் ஒரு கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு தெலுங்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

allu arjun Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe