சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய கதாநாயகனாக வலம் வரும் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று (22.06.2023) கொண்டாடி வருகிறார்.

Advertisment

இதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சினிமாவை தாண்டி, விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த செயல் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாற, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்தோடு சேர்த்து அரசியல் வருகை குறித்தும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள்பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதில் சில போஸ்டர்களின் வசனங்கள்பின்வருமாறு...

Advertisment

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில், ‘தளபதியே! முடியட்டும் திராவிட ஆட்சி; உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி’

மதுரை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ‘அன்று முயற்சி செய்தால் தலைசிறந்த நடிகர், இன்று முடிவு எடுத்தால் தமிழ்நாட்டிற்கே நாளைய முதல்வர்’ என இருக்கிறது.

Advertisment

மதுரை: இன்று 234 தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உங்களைத்தேடி கல்வித் திருவிழாவில்!! நாளை 234 தொகுதியை சேர்ந்த மக்களும் வாக்களிக்க உங்களுக்காக வா தலைவா!! முதலமைச்சர்

பாளையங்கோட்டை: மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தே தீரும்

நெல்லை: ‘மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும். நீங்கள் முடிவெடுத்தால் 2026 - 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு ஏற்றம் வரும்’ என்றும், ‘எங்கள் ஓட்டுக்கு value வேண்டும், அதுக்கு எங்கள் தலைவர் (விஜய்) களத்தில் நிற்க வேண்டும்’

திருச்சி: தமிழகம் போற்றும் வரலாறே! மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே! எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே!

உசிலம்பட்டி: ஜூன் 22-ல் பிறந்தநாள் காணும் நாங்கள் வணங்கும் தலைவா… நாளைய தமிழகத்தின் முதல்வா...