வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்களைப் படக்குழு இன்று (28.10.2021) வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகிவரும் இந்த ஸ்டில்ஸ்கள், படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளன.