Advertisment

'நீயும் நானும் அன்பே...' - கரம் பிடித்த நட்சத்திர ஜோடிகள்

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை லாவண்யா திரிபாதி. தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாயவன் படத்தில் நடித்திருந்தார். இவரும் பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜும் காதலித்து வந்தார்கள். இருவரும் 'அந்தரிக்ஷம் 9000 KMPH' (Antariksham 9000 KMPH) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த ஜுனில் இருவரும் நிச்சயம் செய்துகொண்டனர். இந்த நிலையில் இருவருக்கும் இத்தாலியில் நேற்று இரவு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

celebrity marriages tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe