Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட மொழிகளில் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டெயிலிஸான மாஸ் தோற்றத்தில் தோன்றியள்ள அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.