Skip to main content

'இணையே... என் உயிர் துணையே...' - தான்யா ஹோப் (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

 

 

தமிழில் 'தடம்' படம்  மூலம் அறிமுகமான தன்யா ஹோப், தொடர்ந்து தாராள பிரபு, குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...

 

படங்கள் - முகமது & நவீன் 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒப்பனை முடியா? -  இயக்குநருடன் வாக்குவாதம் செய்த தான்யா ஹோப்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Tanya Hope | Santhanam | Kick |

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக நடிகை தான்யா ஹோப் அவர்களை சந்தித்தோம். கிக் படத்தில் நடித்தது தொடர்பாக தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்

 

நான் நடிக்கும் முதல் தமிழ் காமெடி படம் 'கிக்'. இந்த ஜானர் எனக்கு புதிதாக இருந்தது. இது என்னுடைய மூன்றாவது தமிழ் படம் என்பதால் நன்றாக தமிழ் கற்றுக்கொண்டேன். ஆனால் காமெடி என்பது எனக்கு புதிய விஷயம். சந்தானம் சார் ஒரு காமெடி கிங். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் எனக்கு வித்தியாசமான ஜானர்கள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

 

'தடம்' படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்கும்போது பயமாக இருந்தது. எனக்கும் அருண் விஜய்க்கும் ஒருவரை ஒருவர் அதற்கு முன் தெரியாது. அந்தக் காட்சிக்கான முக்கியத்துவம் குறித்து இயக்குநர் விளக்கினார். அதன்பிறகு அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. கிக் படத்தில் பல்வேறு காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களோடு எனக்கு காட்சிகள் இல்லை. என்னுடைய கரியர் குறித்து நான் பெரிதாக ப்ளான் செய்வதில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தோடு நான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடியன்ஸ் நம்மை நம்பி படம் பார்க்க வருவதால் நிச்சயம் நமக்கான பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும். நல்ல கதைகளை நான் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

 

கிக் படத்தின் இயக்குநர் பிரசாந்த் ராஜ் மிகவும் ஸ்ட்ரிக்டானவர். என்னுடைய கேரக்டருக்காக விக் வைக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது நான் அதை விரும்பவில்லை. என்னுடைய ஒரிஜினல் முடியுடன் நடிப்பது தான் எனக்கு பிடிக்கும். புதுவிதமாக என்னைக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களைப் பார்க்கும்போது அதில் நான் நடித்திருக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்படும். பயோபிக் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 

 

எமோஷனல் காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. காமெடி காட்சிகளில் நடிப்பது தான் கஷ்டம். என்னுடைய கல்யாணம் பற்றி யாரும் அதிகம் கேட்டதில்லை. என்னுடைய குடும்பத்தில் நான் கல்யாணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். எனக்கும் இதுவரை யாரையும் பிடிக்கவில்லை. கிக் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். முதல் முறையாக நான் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இருந்தே நீங்கள் என்னிடம் நிறைய அன்பு செலுத்தி வருகிறீர்கள்.

 

 

 

Next Story

"காமெடியாக நடிப்பது கஷ்டமாக இருக்கு" - தான்யா ஹோப்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

tanya hope speech at kick movie event

 

நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்-1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

 

தான்யா ஹோப் பேசும்போது, “தமிழ் சினிமாவில் எனது முதல் காமெடி படமாக இது உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். காமெடி பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது. காமெடியாக நடிப்பது கஷ்டமாகவும் இருக்கு.. அந்த வகையில் சந்தானம் ஒரு காமெடி கிங்” என்று கூறினார்.

 

இயக்குநர் பிரசாந்த் ராஜ் பேசும்போது, “2009ல் நான் முதலில் இயக்கிய ‘லவ் குரு’ படத்தின் இசைப் பணிகளுக்காக  ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்து செல்லும் தமிழ் பிரபலங்களை பார்த்தேன். அப்போதிருந்தே தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிடைக்கும் என காத்திருக்க ஆரம்பித்தேன். கோவிட் காலகட்டத்தில் கிடைத்த அந்த ரெண்டு வருடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவரை சந்தித்து பேச சில முறை முயற்சித்தும் சரியாக அமையாததால் அதிரடியாக பாண்டிச்சேரிக்கு சென்று திடீரென அவரை சந்தித்து கதையை கூறி சம்மதம் பெற்றேன்.

 

சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் வரை  ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் நடைபெற்ற தனது அப்பாவின் சடங்குகளுக்கு கூட சென்னை வராமல் அங்கேயே அவற்றை செய்து முடித்தார் சந்தானம். படம் துவங்குவதற்கு முன்பே அவர் போட்ட கண்டிஷன்களில் ஒன்று இரவு நேர படப்பிடிப்பு வேண்டாம் என்பது தான். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய முதல் நான்கு நாட்கள் இரவு நேரத்தில் அதுவும் சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டன" என்றார்.