





சிம்பு தனது 49வது படமாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டர் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 3 அன்று வெளியானது. இப்படத்தில் டிராகன் பட பிரபலம் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபய்ங்கர் இசையமைக்கிறார். இவர்களோடு சந்தானம் இப்படத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவுடன் இணைகிறார். சமீபகாலமாக ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் முடிவெடுத்து அதன்வழியே பயணித்த நிலையில் தற்போது தன்னை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய சிம்பு படம் மூலம் மீண்டும் மற்றொரு ஹீரோவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களோடு வி.டி.வி. கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் படத்தின் பணிகள் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் சிம்பு, கயாடு லோஹர், சந்தானம், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.