நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த், காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை அறிவிக்காமல் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் எளிய முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி எளிய முறையில் நடந்த திருமணத்தில் மணமக்களின் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் திருமண புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவிற்கு கீழ் திரை பிரபலங்கள் துல்கர் சலான், காஜல் அகர்வால், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/001.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/03.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/02.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/01.jpg)