சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 ஆம் ஆண்டுவெளியான சித்திரைச் செவ்வானம் படத்தில் அறிமுகமாகியிருந்தார். கடந்த பொங்கலன்று, தனது காதலர் வினீத் என சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இருவருக்கும், கடந்த 21 ஆம் தேதி திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.