Advertisment

இறந்த தந்தையின் புகைப்படத்தோடு திருமண விழாவில் ரன்பீர் கபூர்; கண் கலங்கும் ரசிகர்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (14.4.2022) இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்வுகளில் கரண் ஜோகர், அர்ஜுன் கபூர், சோயா அக்தர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

கடந்த 2020 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர்தந்தை ரிஷி கபூர் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இன்று நடைபெற்ற மெஹந்தி நிகழ்வில் தனது தந்தையின் புகைப்படத்துடன் ரன்பீர் கபூர் கலந்துகொண்டுள்ளார். திருமணத்தில் தனது தந்தையை நினைவு கூறும் வகையில் ரன்பீர் வைத்திருந்த புகைப்படம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Advertisment

alia bhatt ranbir kapoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe