தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத்தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம்செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்ஷய்குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/106.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/103.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/104.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/105.jpg)