Advertisment

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் விழாவை துவங்கி வைத்தனர். விழாவின் போது நடிகர் ரஜினிகாந்திற்கு ‘ஐகான் ஃஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்திற்கு வழங்கினார்.