ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா நடிப்பில் ரஜினி என்ற படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, மூக்குத்தி முருகன், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசையமைக்க, வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனத்துடன் இணைந்து கோவை பாலசுப்பிரமணியம் தயாரிக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
ஏ.வெங்கடேஷின் 'ரஜினி' பட இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்
Advertisment