Skip to main content

அசத்தல் போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் படக்குழு

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.