Advertisment

நியூ இயர் 2023: அஜித் - ஷாலினி (புகைப்படங்கள்)

Advertisment

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் 'துணிவு' படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.இப்படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வெளியான ட்ரைலர்நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

இதனிடையே, அஜித் தனது மனைவி ஷாலினி அஜித்குமார்மற்றும் தனது குழந்தைகளுடன் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளார். ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்துள்ளது.

ACTOR AJITHKUMAR Shalini Ajithkumar
இதையும் படியுங்கள்
Subscribe