கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான்உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே நயன்தாரா திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்புவதாககூறி ரூ.25 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மேலும் அதை இயக்கும் பொறுப்பை கெளதம் மேனனிடம் கொடுக்கப்பட்டது.அதனால் திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் புகைப்படங்களைநெட்பிளிக்ஸ்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்களதுதிருமண வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதாககூறிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியான தற்போது இந்த வதந்திக்குமுற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1327.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1326.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1325.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1324.jpg)