Advertisment

‘ஆத்தி சந்தனகட்ட... ஆட்டம் பம்பரகட்ட...’ - அகில் அக்கினேனியின் திருமண வரவேற்பு(படங்கள்)

நாகர்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனி. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள இவர் ஜைனப் ராவ்ட்ஜி என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 6ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நேற்று(08.06.2025) திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முதல் ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில் சூர்யாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Advertisment
reception nagarjuna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe