தெலுங்கு நடிகர் நாக சைதன்யா பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று(04.12.2024) ஹைதராபாத்தில் அவர்களது குடும்ப ஸ்டூடியோவான அண்ணாபூர்னா ஸ்டூடியோஸில் நடந்தது. இதில்சிரஞ்சீவி, பவன் கல்யாண், எஸ்எஸ் ராஜமௌலி, அல்லு அர்ஜுன், கார்த்தி, ராணா டக்குபதி உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.