மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இந்த விவகாரம் தொடர்பாகமன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். அதன் படி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்மன்சூர் அலிகான்.
விசாரணைக்கு ஆஜரான மன்சூர் அலி கான் (படங்கள்)
Advertisment
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/3.jpg)