Skip to main content

"வெண்பனிமலரே..." கவனம் ஈர்க்கும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மாளவிகா மோகனன் போட்டோ  ஷூட் செய்து தன்னுடைய கலர்ஃபுல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். 

 

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு நிற சாரியில் வெளியான இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தை பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோசமான நடவடிக்கை” - மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
malavika mohanan recent post

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பிசியாக நடித்து வரும் மாளவிகா, சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். படங்களின் அப்டேட், புது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஆகியவற்றை தாண்டி அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை முன்வைப்பார். 

இந்த நிலையில் ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்றை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெய்ப்பூரில் முரட்டுத்தனமாகவும் மோசமான சேவையாகவும் இருந்தது. பணியாளர் நடவடிக்கையும் மோசமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு தங்கலான் படக்குழு சர்ப்ரைஸ்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

thangalaan malavika mohanan poster

 

ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் 'மாஸ்டர்' படம் மூலம் பிரபலமானார். பின்பு தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்ததையடுத்து, தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளது. 

 

இன்று மாளவிகா மோகனன், தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு சார்பில் மாளவிகா மோகனனுக்கு வாழ்த்து போஸ்டர் ஒன்றை பா.ரஞ்சித் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளார். மேலும் 'ஆரத்தி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த போஸ்டர் தற்போது மாளவிகா மோகனன் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.