Advertisment

‘மாநாடு’... ரசிகர்கள் கொண்டாடும் Exclusive புகைப்படங்கள்..! 

Advertisment

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான படத்தின் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு நேற்று(03.02.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ‘மாநாடு’ படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வெளியான படத்தில் சிம்பு இடம்பெறும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe