இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்காக நடிகை கங்கனா ரணாவத் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற கங்கனா ரணாவத், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisment