Advertisment

சர்ப்ரைஸ் விசிட்; சூர்யாவிற்கு அன்பு பரிசு கொடுத்த கமல் (புகைப்படங்கள்)

Advertisment

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பெரும்வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குலெக்சஸ் என்ற சொகுசு கார் ஒன்றையும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி பைக்கையும் பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவின் வீட்டிற்கு சென்று நடிகர் கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அத்துடன் தனது கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைசூர்யாவிற்கு அன்பு பரிசாகஅளித்துள்ளார். அப்போது சூர்யாவின் தந்தை சிவகுமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டாரும் உடனிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ACTOR KAMAL HASSHAN actor surya vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe