இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத்தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று(17.6.2022) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கமல் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடபுடலாக விருந்து வைத்து அசத்தினார். இதனைதொடர்ந்து படத்தின் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், அனிருத் ஆகியோருக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/987.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/988.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/985.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/986.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/984.jpg)