Advertisment

சிவப்பு கம்பள வரவேற்பு... கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் (புகைப்படங்கள்)

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இவ்விழாவானது வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவ்விழா நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகைதீபிகா படுகோன் கலந்து கொள்கிறார்.இந்த விழாவில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில்திரைபிரபலங்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், மாதவன், தமன்னா, ஊர்வசி ரவ்டலா உள்ளிட்ட பலர் அடங்கிய குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Advertisment

இவ்விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. அத்துடன் இயக்குநர்பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பான வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்இவ்விழாவில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.

Advertisment

Pa Ranjith Madhavan ACTOR KAMAL HASSHAN ar rahman cannes film festival
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe