Advertisment

ஜியோ பேபி இயக்கத்தில், நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்தப் பெண்ணின் நிலையைமையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ஜனவரி 15ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b1b4715a-2156-4458-a52c-3248d5cda9aa" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_12.png" />

அந்த வகையில், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான பணிகள் இன்று (03.03.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இதில், நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆர்.கண்ணன் இயக்குகிறார். படத்தின் பூஜை நிகழ்வில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.