Skip to main content

'கலகல' கவுண்டமணி... 'சைலன்ட்' செந்தில்... - ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு புகைப்படங்கள்

Published on 02/12/2018 | Edited on 02/12/2018

 

 

தமிழ் திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் - பிரியங்கா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமணம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கவுண்டமணி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
goundamani land issue

கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதையடுத்து கட்டுமான பணிகள் 2003 ஆம் ஆண்டு வரை தொடங்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வழக்கறிஞர் ஆணையர், சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் வணிக வளாகம் கட்டுவதற்காக, கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

"இவருக்கு எந்த குறையுமே இல்ல" - மாரிமுத்து குறித்து பகிர்ந்த ரமேஷ் கண்ணா

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

ramesh kann about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நக்கீரன் சார்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் தொலைபேசி வாயிலாக மாரிமுத்துவின் இரங்கல் குறித்து கேட்டறிந்தோம். அபோது மாரிமுத்துவுடன் நட்பு பற்றி பேசிய அவர், "ஐஸ்வர்யா ராஜேஷ்,  நான், மாரிமுத்து சார் எல்லேரும் லட்சுமி நாராயணன் டைரக்ட் செய்யும் படத்தில் நடித்தோம். இரவு பகலாக ஷூட்டிங் நடத்தினோம். அதுவும் அடர்ந்த காட்டுக்குள்ள. உற்சாகமாக இருப்பார். நானெல்லாம் டயர்ட் ஆகிட்டாலும் கூட உற்சாகப்படுத்துவார். ஆரோக்கியமான உடல். ஸ்ட்ராங்கான வாய்ஸ். 3 மணி, 4 மணி வரையும் அதே உற்சாகத்துடன் நடிப்பார். அப்படி ஒரு நடிகர். 

 

அவர் திடீர்னு மறைந்திருப்பது பெரிய ஷாக். ஏன்னா... சாதாரணமா ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்திட்டா சரி ஓகே-னு சொல்லலாம். ஆனால் இவருக்கு எந்த குறையும் இல்ல. உடம்பில் எந்த பிரச்சனையும் கிடையாது. அற்புதமான ஒரு நடிகர். அற்புதமான மனிதர். அவரை இழந்தது கலையுலகத்திற்கு இறப்போ இல்லையோ, என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எனக்குமான ஒரு இழப்பாக இருக்கு. 

 

நிஜ வாழ்க்கையில் ரொம்ப தமாஷா பேசுவாரு. கருத்துக்களை ஸ்ட்ராங்காக பேசுபவர். அவருக்கு இது போல் நடப்பதற்கு வாய்ப்புகளே கிடையாது. அனால் அவர் மறைந்திருப்பது, என்ன சொல்றது. வார்த்தைகளே இல்லை. எப்போதாவது சந்திக்கிற மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் அது பெரிய ஷாக் இருக்காது. சமீபத்தில் சந்தித்த மனிதர்கள் இறக்கும் பொழுது தான் ரொம்ப பெரிய சங்கடமா இருக்கு. 

 

மயில்சாமி இறப்பதற்கு 2 நாள் முன்னாடி அவரிடம் பேசினேன். தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடமும் அப்படி தான். 1 வாரம் முன்னாடி பேசியிருப்பேன். இவர்களெல்லாம் நான் அடிக்கடி தொடர்புகொள்கிற மனிதர்கள். இவர்கள் திடீர்னு இறப்பது ஷாக்காக இருக்கு. மனசுக்குள் ஒரு திகில் வருகிறது" என்றார்.