Published on 06/01/2023 | Edited on 06/01/2023





அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சுதாகர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த் "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் அண்ணாநகர் கிழக்கு லோட்டஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரஜினி அங்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.