சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகள்மத்தியில் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை நடனமாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.