Advertisment

அஜயன் பாலா எழுதும் தமிழ் சினிமா வரலாறு என்ற புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நாதன் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலில் 1916 முதல் 1947 வரையிலான தமிழ் சினிமா நிகழ்வுகளும் அவற்றின் பின்னணியும் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் நாசர், சிவக்குமார், கே.ராஜேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், இயக்குனர்கள் கே.பாக்கியராஜ், அமீர், கோபி நயினார், செழியன் மற்றும் பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நடிகர் சிவக்குமார் புத்தகத்தை வெளியிட இயக்குனர் கே.பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.