Advertisment

மீனாவின் கணவர் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி (படங்கள்)

Advertisment

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு தேவா, மன்சூர் அலிகான், குஷ்பு உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வித்யாசாகரின்உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதி ஊர்வலத்தின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ள நிலையில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின்உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Actor Rajinikanth actor Sarath Kumar Mansoor Ali Khan meena
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe