Skip to main content

Chekka Chivantha Vaanam Movie Stills

சார்ந்த செய்திகள்

Next Story

'செக்கச் சிவந்த வானம்' 'நியூ வேர்ல்ட்' கொரியன் படத்தின் காப்பியா? - இதைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்  

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

'செக்கச் சிவந்த வானம்' படம் கடந்த வாரம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் 'மணி சார் இஸ் பேக்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க, இன்னும் சிலபேர் 'படம் சுமாராகத்தான் இருக்கு' என்று சொல்லி வருகிறார்கள்.

 

new world 1



அதையெல்லாம் தாண்டி படம், தியேட்டர்களில் வெற்றிகரமாகப் போகிறது. முக்கியமா இந்தப் படம் 'நியூ வேர்ல்ட்' எனும் கொரியன் படத்தோட காப்பி என்றும் சொல்லுகிறார்கள். குறிப்பாக 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அவங்க அப்பாவை கொன்றவன் பாண்டிச்சேரியில் இருக்கான்னு தெரிஞ்சதும் அவர்கள் நாலுபேரும் காரில் போகும் சீனும் அதே போல நியூ வேர்ல்ட் படத்திலும் வரும் சீன், இரண்டையும் வைத்து ஷாட் முதற்கொண்டு எல்லாமே 'காப்பி'ன்னு மீம்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அதிலும் ப்ளூ சட்டை மாறன் இதைப்பத்தி அவரோட ரிவ்யூவில் பேச, அது வைரலானது. ஆனால் உண்மை எது, இவர்களெல்லாம் சொல்வதுபோல் சீன் முதற்கொண்டு காப்பியடிச்சு இருக்காங்களா, சி.சி.வி. படம் நியூ வேர்ல்ட் படத்தோட காப்பிதானா என்பதை அறிய நியூ வேர்ல்டை தேடிப்பிடிச்சுப் பார்த்தோம்.

 

new world 2



முதலில் நியூ வேர்ல்ட் கதை என்னன்னு பார்ப்போம்... நியூ வேர்ல்ட் படத்தில் முதலில் ஒரு பெரிய டான்-ஐ காட்றாங்க. அவர் ஒரு வழக்கில் இருந்து விடுதலை பெற்று வெளியவந்து வீட்டுக்குப் போயிட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு லாரி விபத்து நடக்குது, அதில் அடிபட்டு ஹாஸ்பிடல்ல ரொம்ப சீரியசான கட்டத்தில் அட்மிட் செய்யப்படுகிறார். அவருக்கு அடுத்து அந்த இடத்திற்கு யார் யாரெல்லாம் வருவார்களோ அவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லப்படுகிறது. அதன்பின் உள்ளூரில் இருந்து ஒரு டான் வருகிறார், வெளியூரில் இருந்து ஒரு டான் வருகிறார், இதற்கு நடுவில் ஒரு போலீஸ்க்காரர் இந்த கேங்கை தீவிரமாக நோட்டமிட்டு வருகிறார். இவையெல்லாம் சென்றுகொண்டிருக்கும்போதே அந்த போலீஸ்க்காரர் இந்த கேங்கிற்குள் ஒரு அண்டர்கவர் ஏஜென்ட்டை ரகசியமாக வைத்து இருக்கிறார் என்று காட்டுகிறார்கள். அந்த அண்டர்கவர் ஏஜென்ட் வெளியூரில் இருந்து வரும் டானுடைய வலது கை. இவர்கள் எல்லாம்தான் அந்தப் படத்தினுடைய முக்கியமான கதாபாத்திரங்கள்.

இதைப் படிக்கும்போது, 'என்னடா இதுதானே செக்கச் சிவந்த வானத்திலும் வருது'ன்னு நமக்கு தோன்றலாம். ஆனால், இதுக்கப்புறம் நியூ வேர்ல்ட் கதை வேறு திசையில் நகர்கிறது. அந்த அண்டர் கவர் போலீஸ் ஆஃபிசர், எங்கே தன் அடையாளம் வெளிய தெரிஞ்சிடுமோ, நம்மள கொன்னுடுவாங்களோனு ஒரு பயத்தோடே இருக்கிறான். அவரை அனுப்பிய போலீஸ்காரர் 'இந்த ஒரு ஆப்ரேஷன் மட்டும் முடிச்சுடு, அதுக்கு அப்புறம் உன்னை யாரும் கண்டுபிடிக்காத வகையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன்'னு சொல்கிறார். இந்த நேரத்தில்தான் அந்தப் பெரிய டான் இறந்துவிடுகிறார், அதுக்கு அப்புறம் அந்த இடத்துக்கு யார் வருவது என்று இரண்டு டான்களுக்கும் நடுவில் சண்டை வருகிறது.

அதற்குள் வெளியூரில் இருந்துவந்த டான், உள்ளூர் டான் பற்றிய தகவல்களை எல்லாம் போலீஸிடம் சொல்லி அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறான். அதன்பின் அந்த இடத்திற்கு இனி யாரும் போட்டிக்கு கிடையாது, நாம்தான் என்று ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறான். ஆனால் அந்த போலீஸ்காரர் அவனுக்கு இடைஞ்சலா இருக்கிறார். அதுனால அவரை பற்றி ஏதாவது விஷயம் கிடைச்சா அவரை  லாக் பண்ணிவிடலாம் என்று எண்ணி, ஹாக்கர்ஸ்லாம் கூட்டிட்டுவந்து அவரை பற்றித் தகவல்களை எல்லாம் திரட்டச் சொல்லுகிறான். அப்போதுதான் கதையில் ஒரு ட்விஸ்ட் நடக்கிறது, அந்த ஹாக்கர்ஸ் கொடுத்த விவரங்களில் யாரெயெல்லாம் இந்த கேங்க்குள்ள அண்டர் கவர் ஏஜென்ட்டாக இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியவருகிறது. அதில் ஒருவர் ஹீரோ அண்டர் கவர் ஏஜென்ட்டோட நெருங்கிய நண்பர். அவனை அந்த டான் பிடித்துவிடுகிறான், வேறு வழியின்றி ஹீரோவே அவன் கையால் தன் நண்பனை கொலை செய்கிறான்.

எப்படியோ எல்லா வேலையும் முடிஞ்சு இந்த டான் நம்பர் ஒன் ஆகிறான். அதனால் நம்ம கிளம்பிடலாம்னு அந்த அண்டர்கவர் போலீஸ் நினைக்கும்போது, அந்த போலீஸ்காரர் அவன்கிட்ட நீயும் போலீஸ்னு அந்த டானுக்கு தெரியும் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார். ஆனால் என்ன காரணத்தினால் உன்னை விட்டு வைத்து இருக்கிறான் என்று தெரியவில்லை. அதனால் நீ போலீஸ் என்னும் அடையாளத்தை போலீஸ் டிபார்ட்மென்ட் அழிச்சிடுச்சு, உன்னால மறுபடியும் போலீஸாக முடியாது, அதனால் நீ அந்த கேங் கூடவே இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்துட்டு அந்த கேங் பத்தின தகவல்களை எல்லாம் போலிஸுக்கு கொடுத்துட்டே இரு, சீக்கரம் அவங்கள அழிச்சிடலாம்' என்று சொல்கிறார். இந்த விஷயத்தில் ரொம்ப அதிர்ச்சியான ஹீரோ, 'சரி நான் அப்படியே செய்றேன்'னு சொல்றான். அதுக்கு அப்புறம் சண்டைகள் எல்லாம் நடக்கிறது.

 

new world meme



கிட்டத்தட்ட வெளியூர் டான் இறந்துபோகும் நிலைமைக்கு போகிறான், அந்த நேரத்தில் அந்த டான் ஹீரோவை கூப்பிட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வைத்திருக்கேன். என் லாக்கர்ல போய் பார் என்று சொல்லுகிறான். ஹீரோ அந்த லாக்கரைப் போய் பார்க்கும்போது அவன் போலீஸ் எனும் எல்லா அடையாளமும் இருக்கிறது. இந்த நேரத்தில் சிறைக்குள் போன உள்ளூர் டான் வெளியே வருகிறான். ஆனால், 'அவனுக்கு பவர் கிடையாது, எப்படியும் வைஸ் ப்ரெஸிடண்ட்தான் தலைவராக போகிறான்' என்று அந்த ஹீரோ நினைச்சிட்டு இருக்கும்போது அந்த வைஸ் ப்ரெசிடெண்ட் அவனோட புத்தியை காட்டுகிறான். ஹீரோவை தனியா கூட்டிட்டு போய் கொல்லப்பாகிறான். அதே நேரத்தில் உள்ளூர் டானும் கொலை  செய்யப்படுகிறான். அங்க இருந்து கட்பண்ணி ஹீரோவை காமிக்கும்போது யரையெல்லாம் வைத்து ஹீரோவை அந்த டான் கொல்லப்பார்த்தானோ அவர்களை வைத்தே அந்த டானை ஹீரோ கொலை செய்கிறான். அதன் பிறகு எந்த கேங்கை அழிக்க அவன் போனானோ அந்த கேங்குக்கு ஹீரோவே தலைவராக மாறுகிறான். இதுதான் நியூ வேர்ல்ட் படத்தின் கதை. 

இந்தக் கதையை கேட்டதும் நமக்கு குருதிப்புனல் கதைதான் நினைவுக்கு வரும். சி.சி.வி.யும் (CCV)  நியூ வேர்ல்ட் படத்தோட கதையும் மொத்தமாக  வெவ்வேறு. அதனால் இந்தப் படத்தோட காப்பிதான் சி.சி.வி. (CCV) என்று சொல்லிட முடியாது. செக்கச் சிவந்த வானம் கதை மொத்தமாக  வேறு. ஒரு அப்பாவின் இடத்துக்கு வர நினைக்கும் மூன்று மகன்கள், அவர்களுக்குள் நடக்கும் துரோகம் என்று நகர்கிறது. ஆனால், நியூ வேர்ல்ட் படம் முழுமையாக அந்த அண்டர் கவர் ஏஜென்டை வைத்துதான் நகர்கிறது. முக்கியமாக அந்த கார் சீன் நியூ வேர்ல்ட் படத்தில் ஒரு காமடி சீன், காரின் முன் சீட்டில் இருக்கும் இரண்டு பேரும் அடியாட்கள். சி.சி.வி படத்தை நியூ வேர்ல்ட் படத்தோட காப்பி என்று சொல்பவர்களில் 99% பேர் கண்டிப்பாக நியூ வேர்ல்ட் படத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் வியட்நாம் காலணி படத்தோட கதையும் அவதார் படத்தோட கதையும் ஒன்றுதான், அதுனால் இதை வைத்து அதை காப்பி அடிச்சு இருப்பாங்கன்னு நம்மால் சொல்ல முடியாது. அதுபோல்தான் செக்கச் சிவந்த வானம் படமும். இந்தப் படத்தின் மேல் வேறு விமர்சனங்கள் வைக்கலாம், ஆனால் காப்பி என்று சொல்வது நியாயமான விமர்சனம் கிடையாது.

 

 

 

Next Story

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
manirathnam

 

 

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

 

செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டது. மிரட்டல் வந்ததை அடுத்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.