ADVERTISEMENT

UK வில் AK; ட்ரெண்டாகும் பைக் ட்ரிப் புகைப்படங்கள்!

10:40 AM Jun 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழு குஜராத்தில் மையமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார் அங்கு பைக் ரேசர் குழுவுடன் பைக் ரைட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் யூரோப் டனல் ரயிலில் அஜித் தனது பைக் ரைட் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் #AKUKTRIP என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்டசெய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT