வலிமை படத்தைத்தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே61'எனத்தற்காலிகமாகத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில்நடைபெற்றபடப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டபடப்பிடிப்புகுஜராத்தில் நடைபெறவுள்ளது.இதற்காகப்படக்குழு குஜராத்தில் மையமிட்டுள்ளனர்.

Advertisment

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார் அங்குபைக்ரேசர்குழுவுடன்பைக்ரைட்சென்றுள்ளதாககூறப்படுகிறது.இந்நிலையில் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில்யூரோப்டனல்ரயிலில் அஜித் தனதுபைக்ரைட்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் #AKUKTRIP என்ற ஹேஷ்டேகையும்ட்ரெண்டசெய்துவருகின்றனர்.