Advertisment

மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவுற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் வேறொரு இடத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜர்பைஜானில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.