இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 'அஜித்தின் 61'படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனாஇருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் மற்றும்பிக் பாஸ் புகழ் கவின் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் அஜித்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கோட் சூட்டுடன் வெள்ளை நிற தாடியில் காதில் கடுக்கனுடன்மாஸாகவும் ஸ்டைலாகவும் தோன்றியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்துடன் அவரது மனைவி ஷாலினி மகன் ஆத்விக், மற்றும் ஷாலினின்தம்பி ரிச்சர்ட் ஆகியோர் உள்ளனர்.