Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதற்கிடையே, தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித் வட இந்தியாவில் பைக் பயணம் செய்துவருகிறார். அந்த வகையில் நேற்று (19.10.2021) அவர் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குப் பைக்கில் சென்றார். அப்போது, அங்கிருந்த ராணுவ அதிகாரிகளுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.