அஜித் - எச் வினோத் - போனிகபூர் ஆகியோரது கூட்டணியில்மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ஏகே61. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சமீபகாலமாக அஜித்தின் பைக் பயண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் தற்போது அந்த லிஸ்டில் கோவில் தரிசனபுகைப்படமும்இணைந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/2057_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/2058_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/2056_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/2055_0.jpg)