இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமாரும்,நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூகவலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “மணமகன், மணமகள் வேடத்தில் ‘பிக்கப்’ என்ற திரைப்படத்திற்காக எடுத்த ஃபோட்டோ ஷூட். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டேன். அதனைக்கொண்டு, இது எனது அடுத்த திருமணமா என்று சமுகவலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர்.
பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்கொலை, பாலியல் வன்புணர்வு போன்றவை தற்போது அதிகமாக நடைபெற்றுவருகிறது.நடிகை நயன்தாராவை ‘பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டிதான் அவர் வந்துள்ளார்.
பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும். அதற்குப் பக்கபலமாக ஊடகங்கள் இருக்க வேண்டும்.என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன். அது எனது சொந்த விருப்பம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-3_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-4_18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-2_26.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th_26.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-1_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-5_15.jpg)