எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.
‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/395.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/396.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/397.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/398.jpg)