Advertisment

‘பூங்காற்றே நீ வீசாதே...’ - மேகா ஆகாஷின் திருமண க்ளிக்ஸ்

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். பின்பு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா அஷோக் செல்வனின் சபாநாயகன் எனத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்டில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணு என்பவருடன் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சாய் விஷ்ணு காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயத்தை முன்னிட்டு நேற்று இவர்களது கல்யாணம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment
celebrity marriages Megha Akash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe