Skip to main content

அசத்தல் கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

“எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது” - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
aishwarya rajesh speech at dear movie press meet

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர்.  வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

ஜி. வி பிரகாஷ் பேசியதாவது, “வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள். அதனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம்” என்றார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, “எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துகள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். இந்தப்படம் ஷுட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம்.

இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.  எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.