Skip to main content

ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியை வாழ்த்திய இளையராஜா (புகைப்படங்கள்)

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த ஆதி நிக்கி கல்ராணி ஜோடிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமண வரவேற்பு  நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் கலைப்புலி தாணு, நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” - இளையராஜா உருக்கம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Ilayaraja said no to the birthday celebration due to the lost of his daughter

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது  உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட  பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  இன்று 80 வயதை கடந்து 81 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலை முதலே இளையராஜாவின் வீட்டின்முன்பு திரண்டனர். பின்பு ரசிகர்களை சந்தித்த இளையராஜா அவர்களின் வாழ்த்தினை பெற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறீர்கள். என் மகளை பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை; உங்களுக்காகத்தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்” என்று உருக்கமாக தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

இளையராஜா பாடல் உரிமம் விவகாரம் - விஜய் ஆண்டனி பதில்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
vijay antony about ilaiyaraaja copy wright issue

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நடிக்க வந்ததிலிருந்து மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருட இறுதியில் மத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார். 

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மற்ற விஷயங்களுக்கு இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக படக்குழு கேட்டிருந்திருக்கலாம். படம் வெற்றி பெற்றவுடன் கமலை பார்த்தது போல் இளையராஜாவையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாடலுக்கான் உரிமம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டு பயன்படுத்தலாம். பிச்சைக்காரன் 2, கொலை, திமிரு பிடிச்சவன் ஆடியோ உரிமம் என்கிட்ட தான் இருக்கு. நானும் ஒரு ஆடியோ கம்பெனி நடத்தி வருகிறேன். அந்தப் பாடலை பயன்படுத்த நினைத்தால் என்னிடம் கேட்கலாம்” என்றார்.