ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியிருந்தார் ரஜினி. இது ரஜினியின் 173வது படமாக உருவாகும் நிலையில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் ரஜினிக்கு அவரது கதை பிடிக்காததால் சுந்தர் சி வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. 

Advertisment

இந்த நிலையில் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 173வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப பின்னணியில் படம் உருவாகுவதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட வெளியீடு சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட போது திட்டமிடப்பட்ட 2027 பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்தப் படம் தொடர்பாக தற்போது சிபி சக்கரவர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் ஒரு சிறிய நகரத்தை சேர்ந்த சிறுவன் தனது விருப்பமான சூப்பர் ஸ்டாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதை மிகப்பெரிய கனவாக வைத்திருந்தான். அதுவே அவனது சினிமா மீதான பேர் ஆர்வத்திற்கு உந்துதலாக இருந்தது. அந்தப் பெரிய கனவு ஒருநாள் நனைவானது. அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கும் மிகப்பெரிய கனவு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அது கைநழுவி போனது. இருப்பினும் அது ஒரு நாள் நடக்கும் என்று அவன் தொடர்ந்து நம்பினான். அந்த நாள்தான் இன்று. 

கனவுகள் நனைவாகும், அற்புதங்கள் நடக்கும் என ரஜினி சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. சில நேரங்களில் வாழ்க்கை, கனவுகளையும் தாண்டி இன்னும் பெரியதாகிறது. ரஜினிகாந்த் சார் மற்றும் கமல்ஹாசன் சார் மற்றும் மகேந்திரன் சார் ஆகியோருக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த நம்பிக்கையை காப்பாற்ற என் முழு மனதுடனும் ஆன்மாவுடனும் அர்ப்பணிப்புடனும் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். அனிருத்துடன் மீண்டும் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisment