Advertisment

ரஜினி 173; பிராமிஸ் கொடுத்த இயக்குநர்!

19 (61)

ரஜினியின் 173வது படம் கமல் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் டான் பட இயக்குநர் தற்போது கமிட்டாகியுள்ளார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியிருந்தது. குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தற்போது பேசியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள ‘வித் லவ்’ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பட அறிவிப்புக்குப் பிறகு இப்போது தான் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்துக்கு நிறைய எதிர்பார்த்த எதிர்பாராத ஆட்களிடம் இருந்து வாழ்த்து வந்தது. 

Advertisment

அதே போல் ஒரு சிலரிடம் இவனா ரஜினி படத்தை பன்றான் என ஒரு பதற்றமும் இருந்தது. அவர்களுக்கு ஒரு ரஜினி ரசிகனா சொல்றேன், படம் பார்த்துட்டு வெளியே வரப்போ அவருடைய ரசிகர்களுக்கும் குடும்ப ரசிகர்களுக்கும் கண்டிப்பா ஒரு திருப்தி கொடுக்கும். அதை நான் உறுதியாக சொல்கிறேன். இது என்னுடைய பிராமிஸ்” என்றுள்ளார்.  

Actor Rajinikanth Cibi Chakaravarthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe