தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நான்கு தசாப்தங்களாக நடித்து வருகிறார். முன்னணி நடிகரான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இப்போது விஸ்வம்பரா, உள்பட மொத்தம் நான்கு படங்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி தனது பெயரை அனுமதியின்றி வணிக நோக்கில் தவறாக பயன்படுத்தப்படுவதாக யூடியூப் சேனல்கள், டிஜிட்டல் மீடியாக்கள்உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக ஹைதரபாத் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், குரல் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடப்படுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதே போன்று சமீபத்தில் நாகர்ஜூனா, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது பெயர் தவறாக பயன்படுத்துவதாக நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.