பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடைசியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அபூர்வா லக்கியா இயக்கியுள்ளார். ஹிமேஷ் ரேஷ்மியா படத்திற்கு இசையமைத்திருக்க சல்மான்கானே தயாரித்தும் உள்ளார். இப்படம் 2020 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா எல்லை பிரச்சனை சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்ற போது இந்திய ராணுவத்தினருக்கும் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது. 

Advertisment

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆனால் அதைவிட அதிகமாக சீன வீரர்கள் மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கடந்த 27ஆம் தேதி சல்மான் கான் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இது தற்போது சீனாவில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. 

Advertisment

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் இப்படம் உண்மைகளை திரித்து காட்டுவதாக விமர்சித்துள்ளது. அந்தக் கட்டுரையில் டீசரில் காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள் உண்மையுடன் ஒத்துப் போகவில்லை என்றும் இந்திய ராணுவம்தான் இந்த மோதலுக்கு முழு பொறுப்பும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கையை அதிகமாக கூறியது எனவும் சீன ராணுவத்தின் மீது அவதூறு பரப்பவும் முயற்சித்தது எனவும் விமர்சித்துள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.